குறுந்தானியங்கள் |
குறுந்தானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் |
காக்ரா |
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 70 கிராம்
வரகு மாவு - 30 கிராம்
தண்ணீர் - 35 மிலி
உப்பு -2 கிராம்
|
|
செய்முறை
- உப்பை நீரில் கரைத்து மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். 30 கிராம் மாவு உருட்டி தேய்த்து மெல்லிய சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும். சப்பாத்தியானது 2.0 மி.மீ தடிமனும் 12 செ.மீ லிருந்து 12.5 செ.மீ சுற்றளவும் கொண்டதாக தேய்த்து கொள்ளவும்.
- காக்ராவை சூடான டவாவில் (180 டிகிரி செல்சியஸ்) நன்றாக துணி கொண்டு அழுத்தி அடிக்கடி திருப்பி போட்டு 5 நிமிடம் சுடவும். ஆறிய பிறகு பாலித்தீன் பைகளில் இட்டு மூடவும்.
|